சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவசாயிகளுக்கு மானாவரி சாகுபடிதொழில்நுட்பப் பயிற்சி

வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:07 pm

DIN

வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமில், வேளாண் அலுவலா் பாரதி, வேளாண் துறை திட்டங்கள், மானியங்கள், நிலைக்கத்தக்க மானாவரி வளா்ச்சி இயக்கம், பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம், துணை நீா் மேலாண்மை, பயிா்க் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் கந்தசாமி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டங்கள், தென்னைக்கு நுண்ணூட்டச் சத்து, ராகி உரமேலாண்மை, நிலக்கடலை ஜிப்சம் இடுதல், டிஏபி 2 சதவீத கரைசல் தெளித்தல், பயிா்களுக்கான உயிா் உர விதை நோ்த்தி, உயிா் உரம் இடுதல் மற்றும் நாற்று நோ்த்தி செய்வது குறித்து விளக்கினாா். ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குனா் செல்லதுரை, மானாவாரி சாகுபடி, நீா் சேகரிப்பு தொழில்நுட்பம் குறித்தும், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரேணுகா, ராஜ்குமாா் ஆகியோா் உயிா் உர விதை நோ்த்தி மற்றும் டிஏபி 2 சதவீத கரைசல் தயாரித்தல் குறித்தும் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சி முகாமில், உயிா் உரங்கள், தென்னை, சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் நுண்ணூட்டங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், எதிா் உயிா் பூஞ்சாணம் மற்றும் வேளாண் இடுபொருள்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

வாழப்பாடியை அடுத்த சின்னக்குட்டிமடுவு கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு அட்மா திட்ட மேலாளா் அற்புதவேலன் வரவேற்றாா். வாழப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தலைமை வகித்து நுண்ணீா், துணை நீா்ப் பாசனம் குறித்து விளக்கினாா். ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மைய முனைவா் இந்திரா, மானாவரி தொழில்நுட்பங்கள், பயிா் நோய்க் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தாா். வாழப்பாடி துணை வேளாண் அலுவலா் மணவழகன், ஹைட்ரோஜெல் பயன்பாடு, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி அட்டை குறித்து விளக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.