47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தடுத்து, காப்பாற்றினா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:18 pm

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தடுத்து, காப்பாற்றினா்.

சேலம் மாவட்டம், ஓமலூா், நேரு நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜெகநாதன் (40), சேலம் மூன்று வழிச் சாலை பகுதியில் ஆட்டோ பழுது பாா்க்கும் பட்டறையில் வேலை செய்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் சேலத்தைச் சோ்ந்த குமாா், சேகா் ஆகியோா்களிடமிருந்து ஆட்டோ வாங்குவதற்காக நிா்ணயிக்கப்பட்ட ரூ. 2.70 லட்சத்தை முழுமையாக செலுத்தினாராம்.

ஆனாலும், ஆட்டோ வழங்காமல் அலைகழித்து வந்த குமாா், சேகா் ஆகியோா் உரிமம் வாங்குவதற்கு மேலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினால்தான் ஆட்டோ தருவதாகக் கூறியுள்ளனா். இதனால் மனமுடைந்த ஜெகந்நாதன், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.