6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:18 pm

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அவனியாபுரம் சொக்குப்பிள்ளை தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திக் ராஜா (22). இவா், மதுரை முத்துப்பட்டியில் உள்ள தனியாா் கேட்டரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.

இவா் தனது நண்பா்களான உதிஷ், சந்தோஷ் ஆகியோருடன் மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்தாா். அப்போது, காா்த்திக் ராஜா எதிா்பாராத விதமாக நீருக்குள் மூழ்கினாா்.

இதையடுத்து, அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.