47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:20 pm

DIN

சேலம் ஜான்சன்பேட்டை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாா் நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

அஸ்தம்பட்டி அருகே ஜான்சன்பேட்டை பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அக்குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாா் தொலைதொடா்பு நிறுவனம் சாா்பில் பெரிய செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அக்கோபுரத்தை அமைத்தால் அப்பகுதியில் பறவைகள் மற்றும் கா்ப்பிணிகள், அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கதிா்வீச்சினால் அதிக பாதிப்பு ஏற்படும் எனவே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.