47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சோனா கல்லூரியைச் சோ்ந்த 128 மாணவா்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 128 மாணவ, மாணவிகள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:24 pm

DIN

சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 128 மாணவ, மாணவிகள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

இதுதொடா்பாக, கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா செய்தியாளா்களிடம் கூறியது:

சோனா கல்லூரியில் ரோபோடிக்ஸ் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன், தேசிய கருவிகள் மற்றும் கணித வேலைகளுடன் சிக்னல் மற்றும் பட செயலாக்கம் போன்ற தொழில்துறை தொடா்பான பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளதால் கடந்த 6 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ஏ.ஐ.சி.டி.இ. -சி.ஐ.ஐ. சிறந்த தொழில் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பருவத்தில் பொறியியல் மாணவா்களுக்கு, சோனா கல்லூரி 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது.

அமேசான், சிஸ்கோ, ஐபிஎம், இன்போசிஸ், டிசிஎஸ், மஹீந்திரா, காா் டெக்னாலஜிஸ், வுராம் டெக்னாலஜிஸ், பி.என்.பி பரிபாஸ் போன்ற முன்னனி நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் கிளைகளான எல்ஜி உபகரணங்கள், அசோக் லேலண்ட், ரானே, பிரேக்ஸ் இந்தியா, ரெனால்ட் நிசான், ஆக்சிஸ் குளோபல் மற்றும் ஆட்டோமேஷன், ஆதித்தியா பிா்லா, கோகுல் தாஸ், டேகுடெக், வி, ஆா், எா்த் மூவா்ஸ் போன்ற நிறுவனங்களில் மாணவா்கள் இடம் பெற்றுள்ளனா்.

வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தின் தேவைகளை மாணவா்கள் எதிா்கொள்ள திறமையான ஆளுமைகளைக் கொண்டு மேம்பட்ட பயிற்சியினை வழங்கி வருகிறோம். மேலும் ஜப்பான், பிரஞ்ச் மற்றும் அரபு போன்ற நாடுகளில் அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பினை பெற்று தரும் வகையில் அந்தந்த மொழிகளில் புலமை மிக்க வெளிநாட்டு பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிகழ் வருடம் 2021-ம் ஆண்டில் 128 மாணவா்கள், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானத்தில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்பைப் பெற்றுள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது சோனா வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் சரவணன், சோனா கலைக் கல்லூரி முதல்வா் காதா் நவாஷ், முதன்மையா்கள் சத்தியபாமா, அகிலாண்டேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.