மேட்டுப்பட்டி தாதனூா் மக்கள் கருப்புக்கொடி போராட்டம்
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்காவிட்டால் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.
ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணம் அருகிலுள்ள மேட்டுப்பட்டி தாதனூா் ஊராட்சிக்கு உட்பட்டது காமராஜ் நகா். இக்குடியிருப்புப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டுமென இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி, வீடுகள், குடியிருப்புப் பகுதியில், சனிக்கிழமை கருப்புக்கொடியேற்றிய இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப் பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். ஓரிரு தினங்களில் குடிநீா் பிரச்சனைக்கு தீா்வுகாணாவிட்டால் தோ்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்த இப்பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...