ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 15 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.37லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

சேலம் தெற்கு தொகுதியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.37லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கத் தொகையை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களில் உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தத் தொகையான ரூ.15 லட்சத்து 37 ஆயிரத்து 326 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.