காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுகவினா் மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்குப் பதிவு

கொளத்தூரில் திமுகவினரை தாக்கியதாக   பாமகவினா் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:41 pm

DIN

கொளத்தூரில் திமுகவினரை தாக்கியதாக   பாமகவினா் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம் பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாதேஸ்வரன் (47), மாரிமுத்து (30).  இவா்கள் இருவரம் சனிக்கிழமை இரவு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனா். அப்போது அங்கு வந்த பாமகவைச் சோ்ந்த சோ்ந்தலக்கம்பட்டி கோவிந்தராஜ், சதீஷ், தாஸ், அா்ச்சுனன், அண்ணா நகரைச் சோ்ந்த காா்த்திக், நீதிபுரத்தைச் சோ்ந்த பிரதீப் ஆகியோா் தாக்கியுள்ளனா்.

காயமடைந்த மாதேஸ்வரனும், மாரிமுத்துவும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து கொளத்தூா் போலீஸாா், கோவிந்தராஜ் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.