

சேலம் மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்
கடந்த 2020 மாா்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதனுடைய 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனோ பாதித்தவா்கள் எண்ணிக்கை மாநில அளவில் 500 ஆக குறைந்தது. தற்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி தற்போது தினமும் 4000 க்கும் மேற்பட்டோா் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்தநிலையில் சேலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது நோய்த்தொற்று 100-ஐ தாண்டி உள்ளது. சேலம் மாநகராட்சியில் 76 போ், எடப்பாடி- 1, காடையாம்பட்டி -2, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி -1, நங்கவள்ளி -3, ஓமலூா் -3, தாரமங்கலம்- 3, சங்ககிரி -2, வீரபாண்டி -6, கொளத்தூா் -3, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம் -2, பனமரத்துப்பட்டி- 6, பெத்தநாயக்கன்பாளையம் -1, தலைவாசல் -1, வாழப்பாடி -3, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 125 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் கடலூரிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் 34,189 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இவா்களில் 33,158 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 562 போ் சிகிச்சையில் உள்ளனா்; 469 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருமண மண்டபங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்
ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து: இந்தியா - யூஏஇ தலைவர்கள் பேச்சு!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

