மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் பலி
சேலத்தில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.


சேலத்தில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சேலம், அஸ்தம்பட்டி பாரதி நகரை சோ்ந்தவா் சிவகுமாா். இவா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி வித்யா, தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இத் தம்பதிக்கு சூா்யா, சரண் என்ற இரு மகன்கள் உள்ளனா். இவா் வியாழக்கிழமை இரவு கோரிமேடு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் அஸ்தம்பட்டி திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மத்திய சிறை எஸ்.பி. பங்களா அருகே வளைவான பாதையில் உள்ள மரத்தின் மீது அவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஏற்காடு பிரதான சாலையில் ஆட்சியா் முகாம் அலுவலகம், டி.ஐ.ஜி., நீதிபதிகள் குடியிருப்பு செல்லும் பாதையில், சிறைத்துறை எஸ்.பி. பங்களா எதிரே சாலையின் ஓரத்தில் மூன்று மரங்கள் உள்ளன. வளைவான பகுதியில் திரும்பும்போது இரவு நேரங்களில் மரங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, அந்த மரங்களை அகற்றிட வேண்டும். அதேபோல அஸ்தம்பட்டி முதல் கோரிமேடு வரையிலான நான்கு வழி சாலையில் ஒரு பக்கம் மட்டும் எல்.இ.டி. மின் விளக்குகள் எரிந்து வருகிறது. அப்பகுதி மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைத்து விபத்தைத் தடுத்திட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...