தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 

News image
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Updated On :17 ஏப்ரல் 2021, 1:33 pm

DIN

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முதல்வரும் அதிமுக இணைய ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். முதலமைச்சருக்கு சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பினை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 
நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.