மும்பை: உலோகம் மற்றும் வாகனப் பங்குகளின் ஏற்றத்தை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 2வது நாளாக கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 801.41 புள்ளிகள் உயர்ந்து 76,304.26 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 567.99 புள்ளிகள் உயர்ந்து 76,070.84 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 172.35 புள்ளிகள் உயர்ந்து 23,581.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் எடர்னல் நிறுவனம் 5.70 சதவீதம் உயர்ந்து அதிகபட்ச ஏற்றம் கண்டது. இதனை தொடர்ந்து டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் எடர்னல், டாடா ஸ்டீல், எம்&எம், எச்டிஎஃப்சி லைஃப் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே நேரத்தில் விப்ரோ, டாடா கன்ஸ்யூமர், இன்ஃபோசிஸ், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1 சதவீதம் உயர்ந்த நிலையில், ஸ்மால்கேப் 100 குறியீடு கிட்டத்தட்ட 0.65 சதவீதம் அதிகரித்தன.
துறை வாரியாக எஃப்எம்சிஜி குறியீடு 0.7% சரிவுடனும் ஐடி துறை குறியீடும் 1% சரிந்தன. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. மூலதனப் பொருட்கள், தொலைத்தொடர்பு, ஆட்டோ, உள்கட்டமைப்பு, ஊடகம், உலோகம், ரியல் எஸ்டேட், தனியார் வங்கி உள்ளிட்ட பங்குகள் தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி 1.63 சதவீதம் உயர்ந்த நிலையில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சற்று உயர்வுடன் முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்.எஸ்.இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 9,365.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 12,593.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
செல்லோ வேர்ல்ட், டாடா எல்எக்ஸி, ரிலாக்ஸோ ஃபுட்வேர், ஜோதி லேப்ஸ், விப்ரோ, சி இ இன்ஃபோ சிஸ்டம்ஸ், நியூஜென் சாஃப்ட்வேர், இன்ஃபோசிஸ், சிப்லா, குஜராத் ஸ்டேட் பெட்ரோ, ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ், கோஃபோர்ஜ், டிசிஎஸ், பாட்டா இந்தியா, டாடா டெக்னாலஜிஸ், மாஸ்டெக், சொனாட்டா சாஃப்ட்வேர், எஸ்பிஐ கார்டு உள்ளிட்ட 340 மேற்பட்ட பங்குகளும் இன்றைய வர்த்தகத்தில் அதன் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.44 சதவீதம் உயர்ந்து 102.7 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Benchmark stock indices Sensex and Nifty rallied for the second consecutive day closing higher by nearly 1 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



