ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 509.73 புள்ளிகள் உயர்ந்து 74,616.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 155.40 புள்ளிகள் உயர்ந்து 23,123.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:23 pm

மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலவி வரும் ஏற்றம் உள்ளிட்டவையால், பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும், இன்றைய வர்த்தக முடிவில் உயர்வுடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் வலுவான செயல்பாடுகள் பங்குச் சந்தைக்கு பாதுகாப்புக் அரணாக அமைந்த நிலையில், தொடக்க சரிவிலிருந்து மீள இது பெரிதும் உதவியது. அதே வேலையில், நிஃப்டி குறியீடும் வர்த்தகத் தொடக்கத்தில் சந்தித்த சரிவிலிருந்து வெகுவாக மீண்டன.

30 பங்குகளை கொண்ட சென்செக்ஸ் குறியீடு 509.73 புள்ளிகள் உயர்ந்து 74,616.58 புள்ளிகளாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 74,686.32 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 73,282.41 புள்ளிகளையும் தொட்டது. அதே வேளையில் 50 பங்குகளை கொண்ட நிஃப்டி குறியீடு 155.40 புள்ளிகள் உயர்ந்து, 23,123.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், சன் பார்மா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் சரிந்தன.

ஆசிய சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஷாங்காயின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன. ஹாங்காங் பங்குச் சந்தை விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தது.

ஐரோப்பியச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) வர்த்தக முடிவில் உயர்வுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 8,167.17 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 8,088.70 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.71 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 109 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Stock market benchmark indices Sensex and Nifty ended higher on Tuesday, as a drop in crude oil prices and a rally in global markets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.