மும்பை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளூ-சிப் நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்களுக்கு அதிக அளிவில் வாங்கி குவித்தால், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள், கடுமையான இழப்புகளுக்குப் பிறகு, சிறிதளவு மீண்டு, உயர்வுடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,134.78 புள்ளிகள் சரிந்து 74,180.26 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 77.05 புள்ளிகள் அதிகரித்து 75,315.04 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 6.45 புள்ளிகள் உயர்ந்து 23,649.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா, எச்.சி.எல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் என்.டி.பி.சி ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி 200 குறியீட்டில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், கோஃபோர்ஜ் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 4 முதல் 5% வரை உயர்ந்தன.
இன்று சுமார் 1,216 பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில் 2,891 பங்குகள் சரிந்தும் 182 பங்குகள் எவ்வித மாற்றமுமின்றி நிறவடைந்தன.
அமெரிக்கா-ஈரானுக்கும் இடையிலான நீடித்து உள்ள தேக்கநிலை, குறுகிய கால பங்குச் சந்தையில் தொடர்ந்து ஒரு நிழலைப் படரச் செய்கிறது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை இழப்புகளை மீட்டெடுத்து, எந்த மாற்றமும் இன்றி சற்று உயர்வுடன் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக அமர்வில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பத் துறை குறியீடு 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் முக்கியக் குறியீடான நிக்கி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் நிறவடைந்தன. அதே வேளையில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமாகின.
அமெரிக்கச் சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று 1 சதவீதத்திற்கும் மேலாக சரிவுடன் நிறைவு செய்தது.
தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1,329.17 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.73 சதவீதம் உயர்ந்து 110.1 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Benchmark indices Sensex and Nifty ended marginally higher on Monday after facing sharp losses in intraday trade.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



