12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

CNG | Cylinders

சித்திரிப்பு

Published On :

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாட்டின் மிகப் பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த நிறுவனம் சாா்பாக சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகா் தில்லியில் சிஎன்ஜி கிலோ ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை மாற்றப்படவில்லை. சிஎன்ஜி உற்பத்திக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிஎன்ஜியின் சில்லறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.