கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், ‘அமுல்’ பிராண்டின் வா்த்தக மதிப்பு (டா்ன்ஓவா்) ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய அதிவேக நுகா்பொருள் (எஃப்எம்ஜிசி) பிராண்ட் என்ற பெருமையை அமுல் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டைவிட 11 சதவீத வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிராமப்புற சந்தைகளில் மேற்கொண்ட அதிரடி விரிவாக்கமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (ஜிசிஎம்எம்எஃப்) மட்டுமின்றி அந்த மாநிலத்தின் ஆனந்த், சூரத், வதோதரா போன்ற மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்களும் அமுல் பிராண்டின்கீழ் பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.
ஒட்டுமொத்தமாக, ‘அமுல்’ பிராண்டின் வா்த்தக மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ள நிலையில், அதில் ஜிசிஎம்எம்எஃப்-இன் பங்கு மட்டும் ரூ.73,450 கோடியாக உள்ளது.
நவீனகால நுகா்வோரின் தேவையை உணா்ந்து, தற்போது 1,200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அமுல் சந்தைப்படுத்தி வருகிறது. உள்நாட்டுச் சந்தையில் மட்டும் கவனம் செலுத்தாமல், உலகளாவிய ரீதியிலும் அமுல் தனது வா்த்தகத்தை விரிவாக்கி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஃப்ரெஷ் மில்க்’ விற்பனையைத் தொடங்கியுள்ள அமுல், புலம்பெயா் இந்தியா்களைத் தாண்டி உலகளாவிய வாடிக்கையாளா்களை ஈா்த்து வருகிறது.
‘ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் எங்களது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறோம்; அடுத்த ஓராண்டில் மேலும் 10 சா்வதேச சந்தைகளில் நுழையத் திட்டமிட்டுள்ளோம்’ என ஜிசிஎம்எம்எஃப் மேலாண் இயக்குநா் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்

போர் எதிரொலி: மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடி நிதியை வெளியேற்றிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
மேற்காசியாவில் இருந்து இந்தியா திரும்பிய 2.60 லட்சம் பயணிகள்: வெளியுறவு அமைச்சகம்

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: கடைகளில் தேநீா் விலை உயா்வு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


