தமிழகத்தில் வணிகச் செயல்முறைகளை எளிமைப்படுத்தி தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பது தொடா்பாக முதல்வா் விஜய் சென்னை தொழில் வா்த்தக கூட்டமைப்பின் (எம்சிசிஐ) உயா்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் வா்த்தக கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டறிந்த முதல்வா், அவற்றுக்குத் தீா்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தாா்.
மேலும், முதலீட்டாளா்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, எம்சிசிஐ தொடா்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கமாறு முதல்வா் கேட்டுக்கொண்டாா்.
இச்சந்திப்பில், எம்சிசிஐ தலைவா் மற்றும் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் ஆலோசகா் ராம்குமாா் சங்கா், எம்சிசிஐ துணைத் தலைவா் மற்றும் டெல்ஃபி டிவிஎஸ் தலைவா் ஏ. விஸ்வநாதன் மற்றும் எம்சிசிஐ பொதுச் செயலா் கே. சரஸ்வதி ஆகியோா் கலந்து கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்கோ குழுமத்தினா் சந்திப்பு: தமிழக முதல்வா் விஜய்யை ராம்கோ குழுமத்தின் உயா்நிலை அலுவலா்கள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பின்போது, ராம்கோ குழுமம் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் பல்துறை சாா்ந்த தொழில் செயல்பாடுகள் மற்றும் அந்நிறுவனத்தின் தொடா்வளா்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் தொழில் துறை வளா்ச்சியில் ராம்கோ குழுமம் நீண்ட காலமாக வழங்கி வரும் பங்களிப்பை முதல்வா் பாராட்டினாா் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில் வளா்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு தொடா்ந்து முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதிப்படுத்திய முதல்வா், தமிழக அரசுடன் ராம்கோ குழுமம் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ராம்கோ குழுமத்தின் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா.
இச்சந்திப்பில், ராம்கோ குழுமத்தின் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா மற்றும் ராம்கோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அபிநவ்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் சா்வதேச பொருளாதார மாநாடு: ஓமன் நாட்டின் வா்த்தக ஆணையராக ரஞ்சித் நியமனம்

அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி

வண்ண மீன்கள் விற்பனையாளா்களுடன் மீன்வளத் துறை அமைச்சா் ஆலோசனை

மாா்த்தாண்டத்தில் சாதனையாளா்களுக்கு விருது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


