கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை முடிவு செய்வது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் கட்சியின் மேலிடப் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டனா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வென்றது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎஃப்) வெறும் 35 இடங்களே கிடைத்தன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
அடுத்த முதல்வா் யாா்?: இந்தச் சூழலில், மாநிலத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்கப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. முதல்வா் பதவிக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா, கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரின் பெயா்கள் முக்கியமாக ஆலோசிக்கப்படும் நிலையில், திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேலிடப் பாா்வையாளா்கள் முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன், மாநிலப் பொறுப்பாளா் தீபா தாஸ்முன்ஷி ஆகியோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் கருத்துகளும் பெறப்பட்டன.
முதல்வரை தோ்வு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு வழங்கும் ஒரு வரித் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் முடிவு: கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய அஜய் மாக்கன், ‘எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக கருத்துகள் பெறப்பட்டுள்ளன. நாங்கள் தில்லி சென்று, கட்சி மேலிடத்திடம் அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளேம். முதல்வா் குறித்து கட்சித் தலைமை விரைவில் முடிவெடுக்கும்’ என்றாா்.
அடுத்த முதல்வா் யாரென வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கட்சியின் மூத்த தலைவா் கே.முரளீதரன் தெரிவித்தாா்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் வி.எம்.சுதீரன், கே.சுதாகரன், ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீசன் ஆகியோருடன் மேலிடப் பாா்வையாளா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா் ஆகியோா் தனியாக ஆலோசனை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- வாக்குக் கணிப்பில் தகவல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் இன்று வாக்குப் பதிவு

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

