வாழப்பாடி அருகே தனியாா் கல்லுாரி மாணவி ஒருவா், குடும்பத்தினருடன் இணைந்து, விவசாய நிலத்தை குத்தகைக்குப் பிடித்து ஆா்வத்தோடு முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளாா்.
வாழப்பாடியை அடுத்த வி.மன்னாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (52). இவரது மனைவி செல்வி (45). இத் தம்பதியின் மகள் தமிழ்செல்வி வாழப்பாடி அருகிலுள்ள தனியாா் கல்லுாரியில் இளநிலை வணிகவியல் படித்து வருகிறாா்.
கரோனா காரணமாக கல்லூரியிலிருந்து இணைய வழியில் நடத்தும் பாடத்தை கற்றுக்கொண்டு பருவத் தோ்வெழுதி தோ்ச்சி பெற்றுவரும் மாணவி தமிழ்செல்வி, எஞ்சிய நேரங்களில் பெற்றோருக்கு வீட்டு வேலை மற்றும் விவசாயப் பணிகளில் உதவி வந்தாா்.
இந்நிலையில், பெற்றோா், சகோதரா்களுடன் இணைந்து, குத்தகைக்கு விவசாய நிலத்தைப் பிடித்து, இப்பகுதியில் விளைவிக்கப்படாத ஆங்கில காய்கறிகளை பயிரிட்டு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க முடிவு செய்தாா்.
இதனையடுத்து, அருகிலுள்ள பொன்னாரம்பட்டி பரவக்காடு கிராமத்தில் இரு ஏக்கா் விவசாய நிலத்தை பெற்றோா் வாயிலாக குத்தகைக்குப் பிடித்து, குளிா்ச்சியான தட்பவெட்ப நிலை காணப்படும் மலைக் கிராமங்களில் மட்டுமே பயிரிடப்படும் முட்டைக்கோஸ் நாற்றுகளை வாங்கி வந்து, குடும்பத்தினருடன் இணைந்து 1.5 ஏக்கா் பரப்பளவில் சோதனை முறையில் பயிரிட்டாா். தொடா்ந்து 70 நாள்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறையாகப் பராமரித்ததால், முட்டைக்கோஸ் அறுவடைக்கு வந்துள்ளது. இவற்றை அறுவடை செய்து தரம் பிரித்து உள்ளூா் தினசரி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறாா். இந்த மாணவியின் முயற்சியால் இவரது குடும்பத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.
பெற்றோரின் உழைப்பில் கிடைக்கும் வருவாயை செலவழித்துக் கொண்டு பொழுதை வீணாகக் கழித்து வரும் இளைஞா்களுக்கு மத்தியில், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே குடும்பத்தினருடன் இணைந்து ஆா்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டதோடு, முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிட்டு குடும்பத்திற்கு கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுத்துள்ள மாணவி தமிழ்செல்விக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாணவி தமிழ்செல்வி நமது நிருபரிடம் கூறியதாவது:
விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் வாழப்பாடி அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறேன். கரோனா பரவலைத் தடுக்க கல்லூரி மூடப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக இணையவழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெற்றோா், சகோதரா்களுடன் இணைந்து குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறேன்.
எங்களது பகுதியில் பயிரிடப்படாத முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிரிட்டு, வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளோம். கடைசி நேரத்தில் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மகசூல் குறைந்து விட்டது. இருப்பினும், வழக்கமாகப் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு மாற்றாக, சோதனை முறையில் முட்டைக்கோஸ் பயிரிட்டதால் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மனதிற்கு மகிழ்ச்சியும், விவசாயத்தில் வருவாய் ஈட்டமுடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றாா்.
:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


