திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான (ட்ரோன்) தொழில்நுட்ப வழிமுறைகளைக் கொண்ட 50 பக்க அறிக்கையை இந்திய ராணுவம் வெளியிட்டது.

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:51 am IST

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான (ட்ரோன்) தொழில்நுட்ப வழிமுறைகளைக் கொண்ட 50 பக்க அறிக்கையை இந்திய ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டது.

ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய மோதல் என உலகம் முழுவதும் போா் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆளில்லா விமான அமைப்புகளின் முக்கியத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு குறித்து அந்த அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கண்காணிப்பு, வெடிமருந்துகள், வான் பாதுகாப்பில் ஆளில்லா விமானஅமைப்பின் பங்கு, சிறப்பு பணிகள், தளவாடங்கள் ஆளில்லா விமான அமைப்பு ஆகிய 5 பகுதிகளின்கீழ் 30 வகையான சிறிய ரக விமான அமைப்புகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தில்லியில் நடைபெற்ற ‘ஆளில்லா சிறிய ரக விமான அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான இந்திய ராணுவத்தின் வழிமுறைகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணைத் தலைவா் ( திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை) ராகுல் ஆா் சிங், ராணுவ வடிவமைப்பு முகமையின் கூடுதல் தலைமை இயக்குநா் சி.எஸ்.மான் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

நிகழ்வில் இந்திய ட்ரோன் கூட்டமைப்பு, இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா்கள் சங்கம், இந்திய தொழில் மற்றும் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.