தொழிலாளா்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல்
சங்ககிரி நகரில் உள்ள தேநீா் கடைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி தரும் ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்திலுள்ள பல்நோக்கு அரங்கத்தில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது 57 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,184 போ் பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதில் மணியனூா் சட்டக் கல்லூரி சிகிச்சை மையத்தில் 45 பேரும், கோரிமேடு மகளிா் கல்லூரியில் 57 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே வாய்க்கால் பட்டறை அரசினா் உயா்நிலைப் பள்ளியிலும், செரி சாலை தொங்கும் பூங்கா வளாகத்திலுள்ள பல்நோக்கு அரங்கிலும் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்திலுள்ள பல்நோக்கு அரங்கத்தில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சுகாதாரத் துறையிடமிருந்து பெறப்பட்ட நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தைப் பயன்படுத்தி கரோனா பாதிக்கப்பட்டவா்களின் பாதிப்பு அளவினைக் கண்டறிந்து தேவைப்படும் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
முன்னதாக, மாமாங்கம் அரபிக் கல்லூரி பகுதியில் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது, முகக்கவசம் இன்றியும், அனுமதித்த எண்ணிகையைவிட அதிகமான பயணிகளை ஏற்றி வந்த 7 தனியாா் வாகனங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் அரசு சாா்பில் 1,001 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனையில் 1,880 படுக்கைகள் என மொத்தம் 2,881 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது 1,380 படுக்கைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருவதாக, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...