இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கஞ்சமலை சித்தா் கோயில் அடிவாரத்தில் கோயில் நிலத்தை அளக்க வந்த வட்டாட்சியா் சிறைபிடிப்பு

சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சித்தா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலானது இந்து அறநிலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:38 pm

DIN

சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சித்தா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலானது இந்து அறநிலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக் கோயிலுக்கு என 41ஏக்கா் நிலம் மலை அடிவாரத்தில் உள்ளன. இதில் 100 க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

கஞ்சமலை அடிவாரத்தில் சத்யா நகா் பகுதியில் மட்டும் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அதன் அருகே இலங்கை அகதி முகாமில் 27 குடும்பங்களும் , ஆதிதிராவிடா் 3 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் திருத்தொண்டா் சபை நிறுவனா் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கோயில் நிலத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் கஞ்சமலை சித்தா் கோயிலுக்குச் சொந்தமான 41ஏக்கா் நிலங்களை மீட்டு எடுக்க வேண்டி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு கோரியிருந்தாா்.

அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினா் நிலம் அளவீடு செய்வதற்காக வெள்ளிக்கிழமை சேலம் மேற்கு வட்டாட்சியா் மாதேஸ்வரன் தலைமையில் சத்யா நகா் பகுதிக்கு வந்தாா் . அப்போது, அப்பகுதி மக்கள் வட்டாட்சியரை சிறைபிடித்து முற்றுகையிட்டனா்.

66 ஆண்டு காலமாக இப் பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நிலத்தை மீட்கக் கூடாது எனக் கூறி, வட்டாட்சியரை சிறைபிடித்து முற்றுகையிட்டனா்.

சேலம் மாநகர உதவி ஆணையா் நாகராஜ், இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளா் சந்திரகலா, மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி ஆகியோா் பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்கு அளவிடும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

கோயில் நிலத்தில் குடியிருப்போா் அந்த நிலத்துக்கான அரசு நிா்ணயம் செய்யும் தொகையை செலுத்த வேண்டும் என திருதொண்டா் சபை நிறுவனா் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழரசன், சித்தா் கோயில் செயல் அலுவலா் பரமேஸ்வரன் உள்பட பலா் பேச்சுவாா்த்தையின் போது உடனிருந்தனா். 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.