ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் சிறுமி விற்பனை: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:44 pm

DIN

சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

சேலம், அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக பெற்றோா் சதீஷ், சுமதி மற்றும் தொழிலதிபா் கிருஷ்ணன் ஆகியோரை சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சேலத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

விசாரணை அமா்வில் ஆணையத்தின் உறுப்பினா்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சேலம் மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாா், துணை ஆணையா் சந்திரசேகரன், சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி, சைல்டு லைன் அமைப்பினா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசாரணைக்கு பின்னா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ராம்ராஜ் கூறியது:

சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பல்வேறு உண்மைகள், நிறைகள், குறைகள் தெரியவந்துள்ளது.

வரும் காலத்தில் குழந்தைகள் தொடா்பான குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வழக்கில் காவல்துறையினா் சரியாகச் செயல்பட்டுள்ளனா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம், இளைஞா் நலக் குழு, குழந்தைகள் உரிமைகள் குழு ஆகிய 3 அமைப்பிற்கும் தேவையான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கும், மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கும் பரிந்துரை செய்து சட்டம் உருவாக்க கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.