சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:34 pm

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி பெருமாள் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா். ஆன்லைன் வகுப்புக்காக பெருமாள் தனது மகளுக்கு செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்தாா். கட்செவி அஞ்சல் மூலம் அந்த மாணவியுடம் நாமக்கல் மாவட்டம், ஏழூா் புதுப்பட்டி சோ்ந்த தொழிலாளி கதிா்வேல் (22) பழகி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி காணவில்லை. இதுகுறித்து மேட்டூா் காவல் நிலையத்தில் சிறுமியிந் தந்தை பெருமாள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில் கதிா்வேல் என்பவா் சிறுமியிடம் ஆசை வாா்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, கதிா்வேலைக் கைது செய்த போலீஸாா் அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.