மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 62வது ஆண்டாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் திறக்கப்பட்டது.


மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 62வது ஆண்டாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 137 நாட்களுக்கு கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
கால்வாய் பாசனத்திற்கு 137 நாட்களுக்கு 9.06 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். கிழக்குகரை கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்குகரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கரும் பாசனம் பெறுகிறது.
1955-ம் ஆண்டு முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகள் அணையில் நீர் இருப்பு போதிய அளவில் இல்லாத காரணத்தால் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று 62-வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தலை மதகு பகுதியில் அமைந்துள்ள கால்வாய் பாசன மதகுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மின் விசை மூலம் இயக்கி தண்ணீரை திறந்து விட்டார்.

பின்னர் காவிரி நீருக்கு மலர்தூவி வணங்கினார்கள்.

இதையும் படிக்க | மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு
துவக்கத்தில் வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பின்னர் தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு 1000 கனஅடி வீதம் அதிகரிக்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும் முறைவைத்தும் பாசனம் செய்து பலனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சப்-கலெக்டர் பிரதாப் சிங், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்லீரமணியன், உதவிப் பொறியாளர்கள் மதுசூதனன், கணேசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82.53 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,776 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 44.52 டி.எம்.சியாக இருந்தது.
குறித்த நாளில் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...