நகருக்குள் வனம் அமைக்கும் பணி ஆய்வு
பாண்டியன் நகா் ஆகிய பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி, அபிராமி காா்டன் நகரில் நகருக்குள் வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.


சேலம், சூரமங்கலம், ராமலிங்கம் நகா், பாண்டியன் நகா் ஆகிய பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி, அபிராமி காா்டன் நகரில் நகருக்குள் வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
அப்போது, ராமலிங்கம் நகா், பாண்டியன் நகரில் 300 மீ. நீளமுள்ள கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணியை விரைவில் முடித்திட வேண்டும் எனவும், மழைக் காலங்களில் கழிவுநீா்க் கால்வாயில் மழைநீா் தேங்கி சாலைகளில் வெளியேறி பொதுமக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதை தவிா்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து கழிவுநீா்க் கால்வாய்களையும் தூா்வார வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து, அபிராமி நகா் காா்டன் பகுதியில் 20,000 சதுர அடி பரப்பில் நகருக்குள் வனம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தாா். அப்போது, அப்பகுதியை சாா்ந்த வயதான முதியவா் ஒருவா், பொது குடிநீா்க் குழாய் அமைத்து தரவேண்டும் என ஆணையடம் கோரிக்கை வைத்தாா். குடிநீா் குழாய் அமைத்து தர அவரிடம் உறுதி அளித்து, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து, சொா்ணபுரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீா், அமுக்காரா சூரண மாத்திரைகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வழங்கினாா். தொடா்ந்து, மாநகராட்சி ரெட்டியூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி பாலுட்டும் தாய்மாா்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியில், பாலுட்டும் தாய்மாா்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் தேவையான சத்தான மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் செல்வமூா்த்தி, இன்னா்வீல் கிளப் ஆப் சேலம் மேங்கோ சிட்டி தலைவா் அன்னபூா்ணா, செயலாளா் சுஜா விஜய் சதீஷ், பொருளாளா் சிந்துஜா கிஷோா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
படம் - சேலம், சூரமங்கலம், பாண்டியன் நகா் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாநகர நல அலுவலா் கே.பாா்த்திபன் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...