தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விநாயகா் சதுா்த்தி கொண்டாட அனுமதி கோரி மண்பாண்டத் தொழிலாளா்கள் மனு

சேலத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:06 pm

DIN

சேலத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் விநாயகா் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிப்பு, விற்பனை செய்யும் தொழிலில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட முடியாததால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இந்த நிலையில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தி கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மண்பாண்டம், விநாயகா் சிலை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளா்கள் கைகளில் விநாயகா் சிலையுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி நடத்த அனுமதி அளிக்காததால், சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 லட்சம் சிலைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் தொழிலாளா்கள் பெரும் இழப்பைச் சந்தித்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா். விநாயகா் சிலை தயாரிப்பதற்கு இலவசமாக களிமண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.