சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்ககிரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
75வது சுதந்திரதினவிழாவினையொட்டி சங்ககிரி வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப், வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை ஆகியவைகள் இணைந்து நடத்தும் 24ஆவது ரத்த தான முகாம் சங்ககிரி வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி, மருத்துவர் எ.ஜெகநாதன் ஆகியோர் முகாமினை தொடக்கி வைத்தனர். சங்ககரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.சண்முகம், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், வடுகப்பட்டி மருத்துவ அலுவலர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனர். கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி ரத்தம் வழங்க வந்தவர்களை சுகாதாரப்பணியாளர்கள் காய்ச்சல் அறியும் நவீன கருவியை கொண்டும், ரத்த அழுத்தம் கணக்கீட்டு செய்து அனுமதித்தனர். இம்முகாமில் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப்நிர்வாகிகள், ரோட்டரி கிளப், இன்னர்வீல் சங்க மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்த 125 பர் ரத்த தானம் செய்ய பதிவு செய்தனர்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன் ரோட்டரி கிளப் மாவட்ட நிர்வாகி எ.வெங்கடேஸ்வரகுப்தா, திமுக நகரச் செயலர் (பொறுப்பு) எல்ஐசி சுப்ரமணியன், சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுபபினர் பி.தங்கமுத்து, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கேஜிஆர்.ராஜவேலு, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செந்திகுமார், பாலாஜி, கிஷோர்பாபு, வழக்குரைஞர் மணிசங்கர், யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”Vijay பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்!” அண்ணாமலை பேட்டி | BJP | TVK

புதுவை தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குச்சாவடி பற்றி அறிய!

9 கோல்களை தடுத்த 40 வயது கோல்கீப்பர்: ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பயர்ன் மியூனிக்!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


