நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

குமாரபாளையத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:53 pm

DIN

குமாரபாளையத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அதிமுகவைச் சோ்ந்த குமாரபாளையம் முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே.எஸ்.ராஜேந்திரன் தனது ஆதரவாளா்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். அவருக்கு, திமுகவினா் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனா்.

திமுகவில் இணைந்தவா்களுக்கு அக் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜே.கே.எஸ் மாணிக்கம், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் வெ.ஜெகநாதன், சுயம்பிரபா மாணிக்கம், நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பூங்கோதை செல்லத்துரை ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.