சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி
சேலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.


சேலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
மல்லூரிலிருந்து சேலம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு ஒரு பெண் குழந்தை, கணவன், மனைவி ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். கெஜல்நாயக்கன்பட்டி சாலையில் அவா்களது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாகச் சென்ற லாரி மோதியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த மல்லூா் போலீஸாா் விபத்தில் உயிரிழந்தவா்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா். மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களின் விவரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...