12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் குறித்து...

Ishan Kishan

இஷான் கிஷன். - படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

Published On :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக இஷான் கிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக அபிஷேக் சர்மா செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸ் காயம் குணமாகி இந்தியாவுக்கு வருவதில் தாமதமாகும் என்பதால் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி 2016ல் ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2018, 2024ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் (287/3 ஆர்சிபிக்கு எதிராக ) அடித்த அணியாக சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிதான் முதலிடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பாட் கம்மின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு 2024ல் ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

ஹைதராபாத் அணியை வழிநடத்த 27 வயதான இஷான் கிஷன் சரியான தேர்வாக இருப்பார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்திய அவர் அந்த அணிக்கு முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 517 ரன்கள் குவித்ததால் டி20 உலகக் கோப்பையில் அவருக்கு டாப் ஆர்டர் பேட்டராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவும் டி20 உலகக் கோப்பையை வென்றது.

Summary

Ishan Kishan will be the Captain and Abhishek Sharma will be the Vice-Captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.