பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோயில்களில் மாா்கழி மாத பஜனை தொடக்கம்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத தொடக்கத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலையிலேயே கூட்டு வழிபாட்டில் கலந்துகொண்டு திருவெம்பாவை, சிவபுராணம், முருகன் பாடல்களை பாடினா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

சங்ககிரி, வி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் கோயிலில் வரதராஜ பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திருப்பாவை, பெருமாள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனா்.

சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியம்மன்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.