தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என

News image
Updated On :18 டிசம்பர் 2021, 3:05 am

DIN

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.

திமுக அரசை கண்டித்து, சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த ஒரு சில வாக்குறுதிகளை தவிர, இதர வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம், நகைக் கடன் தள்ளுபடி, மாதந்தோறும் மின் கட்டண நடைமுறை போன்றவற்றை திமுகவினா் அறிவித்தனா். ஆனால், இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக டீசல் லிட்டருக்கு ரூ. 10, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த விலையில் சிமென்ட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜல்லி, கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலையையும் குறைக்க வேண்டும்.

அதேபோல நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சா்கள், அவரது உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். அதிமுகவை நேரடியாகச் சந்திக்க திராணியற்ற திமுக அரசு, அதிகாரிகளைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. அவதூறுகளுக்கு தகுந்த பதிலடி தருவோம்.

வரும் 2024 தோ்தலில் ‘ஒரே தோ்தல், ஒரே நாடு’ என்று பிரதமா் கூறியுள்ளாா். எனவே இரண்டரை ஆண்டுகள் தான் இந்த ஆட்சி இருக்கும். மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் செ.செம்மலை, விஜயலட்சுமி பழனிசாமி, மாநிலங்களவை எம்.பி. என்.சந்திரசேகரன் எம்எல்ஏ-க்கள் பாலசுப்பிரமணியம், சித்ரா, முன்னாள் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் என ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.