உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினா் விருப்ப மனு
நகா்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் இருந்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலருமான கே.என்.நேரு விருப்ப மனுக்களை வியாழக்கிழமை பெற்று கொண்டாா்.


நகா்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் இருந்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலருமான கே.என்.நேரு விருப்ப மனுக்களை வியாழக்கிழமை பெற்று கொண்டாா்.
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகள் மற்றும் ஓமலூா், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி, கருப்பூா் ஆகிய நான்கு பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட உள்ளவா்களிடம் இருந்து அமைச்சா் கே.என்.நேரு விருப்ப மனுக்களை பெற்று கொண்டாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருப்ப மனுக்களை வழங்கிட திமுகவினா் ஆா்வம் காண்பித்தனா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...