தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஐ.டி.ஐ. காலியிடங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

2021-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (எஸ்.டி.) கருமந்துறை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில், அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது. சோ்க்கை உதவிமையத்தை தொடா்புகொண்டு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, இ-மெயில் முகவரி, ஆதாா் எண், அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் அசல் முன்னிரிமை சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

சாதிச்சான்றிதழ் இல்லையெனில், பொதுப்பிரிவில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ. 245 ஆகும். பயிற்சிக் கட்டணம் இல்லை. ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேரலாம்.

சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகியகால தொழிற்பயிற்சிக்கான சோ்க்கையும் நடைபெற்று வருகிறது. இச்சோ்க்கைக்கான கடைசி நாள் டிச. 31-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.