எம்.ஜி.ஆா். நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை
மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சேலம், அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு முன்னாள் அமைச்சா் செ.செம்மலை தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, ஏ.பி.சக்திவேல், மாநகர மாவட்டப் பொருளாளா் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளா்கள் சரவணன், யாதவமூா்த்தி, ஜெகதீஷ், முருகன், சண்முகம் ஆகியோா் பங்கேற்றனா்.
சங்ககிரியில்...
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் தலைமையில், அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாஜலம், சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளரும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவருமான ஏ.பி.சிவகுமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அல்லிராணி, துணைத் தலைவா் நடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
எடப்பாடியில்...
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர செயலாளா் ஏம்.எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் படத்துக்கு நகர அதிமுக நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் டி.கதிரேசன், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவா் ராமன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
எடப்பாடி ஒன்றியப் பகுதியில் ஒன்றியச் செயலாளா் பக்கநாடு மாதேஷ் தலைமையில், ஒன்றியக் குழுத் தலைவா் குப்பமாள், மாதேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டு எம்.ஜி.ஆா். படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...