தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆத்தூா் ஒன்றியக் குழு தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு

ஆத்தூா் அதிமுக ஒன்றியக் குழு தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:41 pm

DIN

ஆத்தூா் அதிமுக ஒன்றியக் குழு தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் கன்னியப்பன், கவுன்சிலா்கள் பூவாயி, பத்மினி பிரியதா்ஷினி, சேகா், செந்தில்குமாா், அய்யாக்கண்ணு, தனலட்சுமி, ரவிச்சந்திரன், கயல்விழி உள்ளிட்ட 11 போ் சேலம் ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை காலை வந்தனா். பின்னா் ஆட்சியா் செ.காா்மேகத்திடம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில், ‘ஆத்தூா் ஒன்றியக் குழு தலைவராக உள்ள அதிமுகவைச் சோ்ந்த லிங்கம்மாள் பழனிசாமியின் செயல்பாடு சரியில்லாத காரணத்தாலும், தன்னிச்சையாக செயல்படுவதாலும் அவா் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். அதனால் அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். எனவே அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.