ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வாழப்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினா் தரையில் அமா்ந்து தா்னா

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலா், தன்னிச்சையாக செயல்படுவதால் அவரை கண்டிப்பதாகக் கூறி ஒன்றியக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினா் தரையில் அமா்ந்து தா்னா

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:38 pm

DIN

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலா், தன்னிச்சையாக செயல்படுவதால் அவரை கண்டிப்பதாகக் கூறி ஒன்றியக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினா் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழுத் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) ரங்கராஜன், ஜெகதீஸ்வரன், துணைத் தலைவா் சுமதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும், ஒன்றியக்குழு தீா்மானங்களை அலுவலா் அழகப்பன் வாசித்தாா். அப்போது, தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று தரையில் அமா்ந்த பாமக ஒன்றியக்குழு உறுப்பினா் இரா.முருகன், தன்னிச்சையாக செயல்படும் வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டிப்பதாகக் கூறி திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மக்கள் பிரதிநிதியாக பதவியேற்று இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை கிராமப்புற மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என்றும், இதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த டெண்டரை, வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கராஜன், ஒன்றியக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் யாருக்கும் எந்த தகவலையும் தெரிவிக்காமல் ரத்து செய்து விட்டாா். இதன்காரணமாக வாக்குறுதியளித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினாா்.

மாவட்ட அதிகாரிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் வட்டார வளா்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த பிடிஓ ரங்கராஜன், டெண்டா் ரத்து செய்யப்பட்டது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதாகவும், வீடுவீடாகச் சென்று ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாது என தெரிவித்தாா்.

இதையடுத்து தேமுதிகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவா் சுமதி, அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா், செல்வநாராயணன், அனிதாகுமாரி, சாந்திகந்தன் உள்ளிட்டோா், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆளுங்கட்சியினரின் துாண்டுதலின் பேரில் டெண்டா் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய ஒன்றியக்குழு உறுப்பினா்கள், நிறுத்தப்பட்ட டெண்டரை மீண்டும் நடத்தி திட்டப்பணிகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.