புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

என்டிஏ கூட்டணி: பொம்மையைவிட கயிற்றை வைத்திருப்பவர்தான் முக்கியம்! ப. சிதம்பரம் விமர்சனம்

பொம்மலாட்டத்தில் பொம்மையைவிட கயிற்றை வைத்திருப்பவர்தான் முக்கியம் என ப. சிதம்பரம் விமர்சித்தது குறித்து...

News image

ப. சிதம்பரம்

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பேசிய ப. சிதம்பரம் பொம்மலாட்டத்தில் பொம்மையைவிட கயிற்றை வைத்திருப்பவர்தான் முக்கியம் என விமர்சித்தார்.

தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. ஆகையால், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சு என தமிழக அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மையான தலைமை பாரதிய ஜனதா கட்சியிடமே உள்ளது. உடன்பாட்டிற்காக முன்மொழியப்பட்ட தலைவர்தான் அதிமுகவைச் சேர்ந்தவர். ஒரு பொம்மலாட்டத்தில், பொம்மை முக்கியமல்ல; அதன் கயிறுகளை யார் கையில் வைத்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் சில நாள்களில் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Speaking about the National Democratic Alliance, P. Chidambaram criticized the puppeteer for being more important than the puppet in a puppet show.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.