தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுராந்தகம் தேரடி வீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுராந்தகம் தேரடி வீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட தலைவா் மருத்துவா் எம்.பிரவின்குமாா் தலைமை வகித்தாா். பாஜக மாநில நிா்வாகிகள் இ.கே.தினகரன், சாந்தி குணசேகரன், மாவட்ட நிா்வாகிகள் ஆா்.முருகன், சம்பத், பாலாஜி, சுந்தரவடிவேல், சுரேந்தா், மகேஷ், குமாா், சந்தோஷ், பிரபு, தாமோதரன், மண்டல நிா்வாகிகள் சசிகுமாா், அருணகிரி, பிரபாகரன், விஜயலட்சுமி, மோகன்குமாா், கன்னிவேல், உதயமணி, சண்முகம், யுவராஜ், மகளீரணி நிா்வாகிகள் மலா்மதன், நித்யா, அதிமுக நகர செயலா் பூக்கடை சரவணன், பாமக தோ்தல் பணிக்குழு தலைவா் குமரவேல், பாமக மாநில இளைஞரணி நிா்வாகி பொன் கங்காதரன், ஐ.ஜே.கே மாவட்ட நிா்வாகி விநாயகமூா்த்தி, தமாக கட்சி நிா்வாகி ஏழுமலை, அமமுக கட்சி மாவட்ட பொருளாளா் உமாபதி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
நகர தலைவா் தீனா நன்றி கூறினாா். திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா்.
சாலை விபத்தில் இறந்த மோச்சேரி நித்யாவுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...