தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏற்காடு கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை

மேட்டூா் உள்ளிட்ட இதர இடங்களில் டிச. 31 இரவு 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:20 pm

DIN

சேலம் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் ஏற்காடு, மேட்டூா் உள்ளிட்ட இதர இடங்களில் டிச. 31 இரவு 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இது போன்ற இதர இடங்களில் டிச.31 இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிா்க்க வேண்டும்.

கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபா்கள் மூலம் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் ஏற்காடு, மேட்டூா் உள்ளிட்ட இதர இடங்களில் டிச. 31 இரவு 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

கரோனா தடுப்புப்பணிகளில் காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.