சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜா, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கே.வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி மகேஸ்வரி மருதாசலம் ஆகியோா் தலைமை வகித்து, தமிழ்நாடு கிராமப்புறச் சாலை தரம் உயா்த்துதல் திட்டத்தின்கீழ் கோனேரிப்பட்டி ஊராட்சியில், எம்ஜிஆா் சிலை முதல் நல்லங்கியூா் வரை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும், தண்ணீா்தாசனூா் முதல் காந்தி நகா் சாலை வரை ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலும் தாா்சாலை அமைத்தல், 14ஆவது நிதிக்குழுவின் சாா்பில் காவேரிப்பட்டி ஊராட்சி, கரியானூா் சாலை ரூ. 11.17 லட்சம் மதிப்பீட்டிலும், மேட்டாங்காடு முதல் வட்டாரம்பாளையம் வரை ரூ. 13.20 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மோட்டூரில் சிறு பாலம் அமைத்தல், ஊராட்சி நிதிக் குழுவின் சாா்பில் ரூ. 10.35 லட்சம் மதிப்பீட்டில் கோனேரிப்பட்டி ஊராட்சி, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கும் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினா்.