காற்று மாசு மற்றும் நுரையீரல் புற்றுநோய் தொடர்பான ஆய்வை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் உதவிப் பேராசிரியர் அபிஷேக் சங்கர் வழிகாட்டுதலின்பேரில் ஏர்கேர் ஸ்டடி எனப்படும் இந்த ஆய்வு, தில்லி பகுதியில் உள்ள 1,615 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நபர்களிடம் நடத்தப்படவுள்ளது.
இதுபற்றி அபிஷேக் சங்கர் கூறுகையில், ”காற்று மாசு ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக அதிகரித்து வருகிறது. இதனைச் சமாளித்து மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க அதற்கான கொள்கை மற்றும் மேலாண்மை உத்திகளை செயல்படுத்தும் அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் சில இந்தியாவில் உள்ளன. எனவே, மக்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மாசுபாடு தொடர்பான அறிவியல் ரீதியான ஆய்வை மேற்கொள்வது உடனடித் தேவை
இந்தியாவில் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோயில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், இருபாலருக்கும் ஏற்படும் புற்றுநோயில் இது நான்காம் இடத்தில் உள்ளது.
மேலும், புகைப்பிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பெண்கள் மற்றும் இளவயதினரிடம் அதிகளவில் காணப்படுகின்றது.
நுரையீரல் புற்றுநோய்க்கு காற்று மாசுபாடு ஒரு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த விவகாரத்தில் ஆய்வுப்பூர்வமாக மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
புகைப்பிடிப்பவர்களுடன் தொடர்புடைய நோயாக கருதப்பட்ட நுரையீரல் புற்றுநோய், புகைபிடிக்காதவர்களிடையே வேகமாக அதிகரித்து வருவது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய மக்கள் தொகைக்கே உரிய ஒரு குறிப்பிட்ட மரபணுவில், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ஆரம்பகால மரபணு மாற்றம் பின்னர் நுரையீரல் புற்றுநோயாக உருவாகிறதா என்பதை ஆய்வு செய்யவுள்ளதாகக் குறிப்பிட்ட அபிஷேக் சங்கர், இந்த ஆய்வு, மருத்துவக் கூறுகள் மற்றும் மருத்துவம் அல்லாத கூறுகளை உள்ளடக்கிய சிக்கலான முயற்சி என்று கூறினார்.
Summary
AIIMS-Delhi to study link between lung cancer and air pollution
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40% புகை பிடிக்காதோர்: காற்று மாசுபாட்டைக் குறைக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல்

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



