புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40 சதவிகிதத்தினருக்கு காற்று மாசுதான் காரணம் என பாஜக எம்.பி. ஜெசங்பாய் தேசாய் கூறியுள்ளார்.
நாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி, மாநிலங்களவையில் குஜராத் பாஜக எம்.பி. ஜெசங்பாய் தேசாய் பேசுகையில், "நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 40 சதவிகிதத்தினர் புகை பிடிக்காதவர்கள் என்று எய்ம்ஸ் கூறுகிறது. இதன் முக்கிய காரணம் காற்று மாசு மட்டுமே.
விரைவான நகரமயமாக்கல், தொழில்துறை விரிவாக்கம், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை காற்றின் தரத்தில் தொடர்ச்சியான சரிவை ஏற்படுத்துகின்றன; பொது சுகாதாரத்தில் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன.
சுமார் 3,200 பேரியம் காற்று மாசு - புற்றுநோய் தொடர்பு குறித்து எய்ம்ஸ் விரிவான ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
நுரையீரல் புற்றுநோயைக் கையாள்வதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது, தாமதமாக நோயறிதலே. பெரும்பாலும் நோய்முதிர்விலேயே கண்டறியப்படுகிறது.
இதன் விளைவாக, சுமார் 70 சதவிகித நோயாளிகள், பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வருடத்துக்குள்ளாகவே இறக்கின்றனர். இது நமது சுகாதார அமைப்பின் தயார்நிலை மற்றும் பொது விழிப்புணர்வு குறித்து தெளிவுபடுத்துகிறது.
காற்று மாசுபாட்டைக் குறைத்துக் கட்டுப்படுத்தவும், நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான இலக்கு, பொது விழிப்புணர்வு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
Of all lung cancer patients, 40 percent never smoked, says BJP MP Jesangbhai Desai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு 11 சதவிகிதம் அதிகரிப்பு!

அறிவியல் ஆயிரம்: மார்பகப் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் வைட்டமின் டி!

நகரங்களில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய்? முதியோரை அதிகம் பாதிக்கிறதா?

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




