உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

கம்போடியாவின் 72 வயது மன்னர் நோரோடோம் சிஹாமோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

King Norodom Sihamoni of Cambodia

கம்போடியா மன்னர் நோரோடோம் சிஹாமோனி... - AP

Published On :

கம்போடியா நாட்டின் மன்னர் நோரோடோம் சிஹாமோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சீனாவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவின் 72 வயதான மன்னர் நோரோடோம் சிஹாமோனி மற்றும் அவரின் தாயார் நோரோடோம் மோனினேத் ஆகியோர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் சீனாவுக்குச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் மன்னர் சிஹாமோனிக்கு, புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் புற்றுநோய் பாதிப்புக்காக சீனாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக, மன்னர் சிஹாமோனியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பின் தன்மைக் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், இவ்வகை புற்றுநோய் 8 ஆண்களில் ஒருவருக்கு ஏற்படுவதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக் கூடியவை எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, மன்னர் சிஹாமோனியின் தந்தையும் கம்போடியாவின் மறைந்த முன்னாள் மன்னருமான நோரோடோம் சிஹானுக்கும் கடந்த 1993 ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், சீனாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மன்னர் சிஹான் கடந்த 2012 ஆம் ஆண்டு 89 வயதில் காலமானது குறிப்பிடத்தக்கது.

Summary

King Norodom Sihamoni of Cambodia is suffering from cancer and is undergoing treatment in China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.