எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே அமெரிக்கா செல்கிறார் பிரிட்டன் மன்னர்! என்ன காரணம்?

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவுக்குச் செல்வது குறித்து...

News image

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் - (கோப்புப் படம்)

Updated On :1 ஏப்ரல் 2026, 3:56 pm IST

பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அமெரிக்காவுக்குச் செல்வதாக, பக்கிங்காம் அரண்மனை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று அறிவித்துள்ளது.

இந்தப் பயணமானது அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஏப். 27 முதல் ஏப். 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஈரான் மீதான போரில் அமெரிக்க போர் விமானங்கள் தங்களது விமானத் தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பகிரங்கமாக அதிபர் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

இதையடுத்து, பிரிட்டன் குறித்து அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்களால் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அமெரிக்க பயணத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஏராளமான உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

பிரிட்டனில் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேண்டுகோளை ஏற்று மன்னர் மற்றும் ராணி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகவுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றிருந்தார். மேலும், டிரம்ப்பின் பிரிட்டன் பயணத்தில் அரசக்குடும்பத்தின் மரபுகளை அவர் வேண்டுமென்றே மீறியதாகக் கூறி கண்டனங்கள் எழுந்தன.

மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்நாளில் இதுவரை 19 முறை அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

King Charles III of Britain is traveling to the United States on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.