
அமெரிக்காவின் மோசமான அதிபர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்! ஈரான் கடும் தாக்கு!
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் என ஈரான் விமர்சனம்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப் என ஈரானின் உயரிய தேசியப் பாதுகாப்பு அமைப்பு விமர்சித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் எதிராக அமெரிக்கா தொடங்கிய போரானது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கத்தில் திரும்பியுள்ளது. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று (அக்.2) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப் எனக் குறிப்பிட்டு ஈரானின் உயரிய தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலர் மொஹ்சன் ரெசாய் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் தொடர்ந்து தோல்வியடைந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறார்; இப்போது அவர் கூறுபவை அவரது கற்பனைகளை மிஞ்சிவிட்டன.
நீங்கள் உங்களின் கற்பனையில் நாள்தோறும் வெற்றிபெறலாம். ஆனால், எதார்த்தம் என்பது ஈரானால்- அதன் மக்கள், வீரர்கள் மற்றும் ஏவுகணைகளால் வடிவமைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் விவகாரம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும், இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெறும் எனவும் அதிபர் டிரம்ப் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran's top national security body has criticized Donald Trump as the worst president in American history.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



