பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தட்டம்மைப் பரவலால் திணறும் வங்கதேசம்! 1,100-க்கும் அதிகமானோர் பலி!

வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்புகளால் 1,100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது குறித்து...

measles outbreak

வங்கதேசத்தில் தட்டம்மைப் பரவல்... - கோப்புப் படம்

Published On :

வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் 1,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் இன்று (அக்.2) மட்டும் தட்டம்மையால் 4 குழந்தைகள் பலியானதாகவும்; இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 1,114 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,221 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம், சந்தேகிக்கப்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,94,084 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், இதேவேளையில் 21 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், உறுதியான தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 21,623 ஆக அதிகரித்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸின் ஆட்சியில் ஏற்பட்ட தடுப்பூசி செலுத்துவதில் இடைவெளி ஏற்பட்டு இந்தத் தொற்று பரவி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that more than 1,100 people have died due to measles in Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.