மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 20 பேர் பலி! 100-க்கும் அதிகமானோர் சிக்கித் தவிப்பு!

காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது...

Gaza building collapse kills 20

காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 20 பேர் பலி... - ஏபி

Published On :

காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட குடியிருப்பு கட்டடம் புதன்கிழமை (செப். 16) அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

இத்துடன், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய 100-க்கும் அதிகமான மக்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்,

“கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதுடன், மாயமானவர்களைத் தேடும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, சுமார் 100-க்கும் அதிகமானோர் இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாததது மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமாகியுள்ளது.

மேலும், இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடம் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களில் சேதமடைந்திருந்தாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலின் போரினால் காஸாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சேதமடைந்த கட்டடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the death toll from the collapse of an apartment building in Gaza has risen to 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.