சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பலி!

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி உயிரிழந்தாகத் தகவல்...

Iran's former Foreign Minister Kamal Kharazi

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி... - ANI

Published On :

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக, கடந்த பிப். 28 முதல் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் வெடித்த போரில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப். 1 அன்று தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதிகளின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், மறைந்த அயதுல்லா கமேனியின் வெளியுறவு ஆலோசகருமான கமல் கராசியின் வீடு தகர்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில், அமைச்சர் கராசியின் மனைவி கொல்லப்பட்ட நிலையில், அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கமல் கராசி சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) இரவு உயிரிழந்ததாக, ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's former Foreign Minister, Kamal Kharazi who sustained severe injuries in attacks by the United States and Israel has died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.